ருவன்வெலிசாய முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக களத்திற்கு இன்று மாலை வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் திடீரென வருகை தந்து கேள்வியெழுப்பியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் புனித பூமியினுள் இவ்வாறான செயல்களை முன்னெடுப்பது சாசனத்திற்கு செய்யும் அவமதிப்பு எனக் கூறி, அந்த நபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளை கடுமையாக சாடியுள்ளார்.

முக்கிய விடயங்கள்

  • இன்று மாலை வந்த நபர் ஒருவர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளை சாடியுள்ளார்.
  • அனுராதபுரம் புனித பூமியில் இவ்வாறான செயலை செய்வது சாசனத்திற்கு செய்யும் அவமதிப்பு என அவர் கூறியுள்ளார்.
  • பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தலையிட்டு அந்த நபரை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

பொலிஸாரின் தலையீடு

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் குறித்த நபருக்கும் இடையில் கடும் வாக்குவாதமும் அமைதியற்ற சூழலும் உருவாகின.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குழப்பத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த நபரை சத்தியாக்கிரக களத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.