செனாரோ மோட்டார் நிறுவனம் (Senaro Motor Company) தனது புதிய மைல்கல்லாக 'செனாரோ சிக்னேச்சர் ஷோரூம் - கம்பஹா' (SENARO SIGNATURE SHOWROOM - GAMPAHA) எனும் பிரம்மாண்ட காட்சிக்கூடத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் காட்சிக்கூடமாகக் கருதப்படும் இந்த நிலையம், 2026 நவம்பர் 12 அன்று கம்பஹா, மிரிஸ்வத்தையில் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேசிய அணித் தலைவருமான சனத் ஜயசூரிய மற்றும் முன்னாள் தேசிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், கம்பஹா மாவட்ட மேயர் எரிக் லக்ஷ்மன் எதிரிவிக்ரமவும் கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் இணைந்து இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகளும்

வழக்கமான விற்பனை நிலையங்களைத் தாண்டி, இந்த புதிய கம்பஹா சிக்னேச்சர் காட்சிக்கூடமானது பல்வேறு வசதிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்தல், செனாரோ நிறுவனத்தின் அசல் உதிரிப்பாகங்களைப் பெறுதல், முழுமையான மோட்டார் சைக்கிள் பராமரிப்புச் சேவைகள் மற்றும் குத்தகை (லீசிங்) வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 23 வருடங்களாக இயங்கி வரும் செனாரோ நிறுவனம், உள்நாட்டிலேயே மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து பொருத்துகிறது. இதில் செனாரோ GN 125 மற்றும் Click 150i ஆகிய மொடல்கள் 35 வீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பெறுமதி சேர்க்கையைக் கொண்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான புதிய சலுகை அட்டை

இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'செனாரோ ரைடர்ஸ் கிளப்' (SENARO RIDERS CLUB) அட்டை எனும் அங்கத்துவத் திட்டமும் இந்த நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நிறுவனம் தனது நாடளாவிய வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த அட்டையின் ஊடாக செனாரோ மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் விசேட தள்ளுபடிகள், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் பிரத்தியேக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.