கொழும்பு, பொரளை வோர்ட் பிளேஸில் உள்ள கட்டடமொன்றில் இன்று (23) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உள்ளே சிக்குண்டிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தீ பரவிய இந்த இடம் ஒரு ஹோட்டல் என சில தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை, அது வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு வளாகம் எனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொரளை பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.