தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள காட்டாறு ஒன்றில் நீராடச் சென்ற அறுவரில் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட மற்றும் களுபோவில பகுதியிலிருந்து சென்ற இளைஞர் குழுவினர் பெவரலிய பகுதியில் உள்ள ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மழை பெய்ததன் காரணமாக திடீரென ஏற்பட்ட கடுமையான நீர்வரத்து மற்றும் வேகமான காட்டாற்று வெள்ளம் காரணமாகவே அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
காணாமல் போனவர்களின் பாதணிகள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டறிய இராணுவத்தினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





