பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தையும் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடத் தயார்
இந்த இரு சட்டமூலங்கள் தொடர்பாகவும் கலக்கமடைந்துள்ள எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடுவதற்குத் தாம் தயார் என ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சட்டங்களை உருவாக்கும்போது பாராளுமன்றத்தின் விருப்பம் மட்டுமன்றி மக்களின் விருப்பமும் அவசியமானது என்பதை உணர்ந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, மக்கள் அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் இந்த இரு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.






