2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
பொய்யான தகவல்களைப் பரப்பி நாட்டின் அப்பாவி மலையக மக்களை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவொரு அவநம்பிக்கையோ அல்லது பயமோ இன்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்மொழியப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் சட்டமூலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சரத்தை நீக்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசு சாரா நிறுவனங்களின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
தனது பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நடுநிலையான விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் சாட்சிகளான இரு இந்திய பிரஜைகளுக்கு அழைப்பாணை ஒப்படைக்கப்பட்டுள்ளதா என கண்டறிந்து ஜனவரி 18 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 57 மெகாவாட் இயற்கை எரிவாயு மின்நிலையத்தை அமைப்பதற்கான 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முழுமையான ஒப்பந்தத்தை இலங்கையின் லக்தனவி நிறுவனம் வென்றுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்கவைக்கும் புதிய அறை அண்மையில் அநுராதபுரம் நகரில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
2027 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பல அரச தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 19 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி ஒவ்வொரு ஐந்து பேரிலும் ஒருவர் இந்நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.