ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த Azur Air விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, அவசர வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகத் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானம் மத்தளவை வந்தடைந்த பின்னர், இவ்வாறு முழுமையான சோதனைக்கு உட்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டுநாயக்கவிற்கு திருப்பி விடப்பட்ட உஸ்பெகிஸ்தான் விமானம்

இந்த அவசர பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கும் கணிசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, உஸ்பெகிஸ்தானில் இருந்து மத்தளவிற்கு வருகை தரவிருந்த மற்றுமொரு விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.