Rockstar Games நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள Grand Theft Auto VI (GTA VI) காணொளி விளையாட்டு நாளை வெளியிடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது 2013 ஆம் ஆண்டு வெளியான Grand Theft Auto V விளையாட்டிற்குப் பின்னர், 13 வருடங்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்குக் கிடைக்கும் பிரதான புதிய பதிப்பாகும்.

இந்த விளையாட்டை PlayStation 5 மற்றும் Xbox Series X|S ஆகிய கேமிங் கன்சோல்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய விடயங்கள்

  • 2013 இல் வெளியான GTA V விளையாட்டிற்குப் பின்னர் 13 வருடங்கள் கழித்து வெளிவரும் புதிய பதிப்பு
  • PlayStation 5 மற்றும் Xbox Series X|S கேமிங் கன்சோல்களுக்காக வெளியிடப்படுகிறது
  • முதன்முறையாக பிரதான பெண் கதாபாத்திரத்தில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது
  • தயாரிப்புச் செலவு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன

புதிய கதைக்களமும் கதாபாத்திரங்களும்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான லியோனிடா மாநிலமே இதன் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மியாமி நகரை அடியொற்றிய வைஸ் சிட்டி இதன் பிரதான நகரமாகும்.

குற்றப் பின்னணியைக் கொண்ட ஜேசன் டுவால் மற்றும் லூசியா கமினோஸ் ஆகியோரை மையமாக வைத்தே இக்கதை நகர்கிறது. GTA வரலாற்றில் முதன்முறையாக முழுமையான பிரதான பெண் கதாபாத்திரமாக லூசியா அறிமுகப்படுத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதில் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் விரிவான சூழலமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகளவில் தீவிர ஆர்வம்

இந்த விளையாட்டின் உற்பத்திச் செலவு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டக்கூடும் என்று துறைசார் மதிப்பீடுகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகின்றது.

விளையாட்டு வெளியாகும் நாளை முன்னிட்டு சில நாடுகளில் உள்ள விளையாட்டாளர்கள் தமது பணிகளுக்கு விடுமுறை பெற்றுள்ளதுடன், பணியாளர்களுக்காகச் சில நிறுவனங்கள் விசேட ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளன.

இதையும் படியுங்கள்

  • சீனாவில் சால்வை அணிந்து தோன்றிய புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள்
  • ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
  • தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றின் உதவியை நாடும் இம்ரான் கான்