உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை நாளை (15) நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பான விடயங்களை விளக்கினர்.

முக்கிய விடயங்கள்

  • நாளை (15) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன
  • சிற்றுண்டி வகைகள் 05 ரூபாவினால் அதிகரிக்கப்படும்
  • ரைஸ், கொத்து மற்றும் சோற்றுப் பொதி ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிப்பு
  • லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பே இத்தீர்மானத்திற்குக் காரணம்

விலை அதிகரிக்கும் விபரம்

இத்தீர்மானத்திற்கு அமைய அனைத்து வகையான சிற்றுண்டிகளின் விலையும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ரைஸ், கொத்து மற்றும் சாதாரண சோற்றுப் பொதி ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே உணவு உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் நோக்கில் இவ்வாறு விலைகளைத் திருத்தம் செய்ய நேரிட்டதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.