தொழில்வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14 வருடங்களாக காணாமல் போயுள்ளார். அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த நிலுகா ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள ஆவணங்களின்படி, அவர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். அந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து தங்களுக்கு எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளிடம் முறைப்பாடு

இவ்விடயம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் கடந்த காலங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பலமுறை முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி CD/183/2208 என்ற குறிப்பு இலக்கத்தின் கீழ் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இப்பிரச்சினை குறித்து கடிதங்களை அனுப்பியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், நிலுகா ராஜபக்ஷ இருக்கும் இடம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியவராத நிலையில், அவரைக் கண்டுபிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.