திருகோணமலை, ஓர்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் 22 ஆவது படைப்பிரிவு முகாம் வளாகத்தில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று (21) அதிகாலை திடீரென தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய விடயங்கள்
- திருகோணமலை ஓர்ஸ் ஹில் 22 ஆவது படைப்பிரிவு முகாமின் களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- இச்சம்பவம் இன்று (21) அதிகாலை வேளையில் பதிவாகியுள்ளது.
- நகர சபை தீயணைப்பு பிரிவினரும் இராணுவத்தினரும் இணைந்து தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீயணைக்கப்பட்ட விதம்
இந்த தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே செயற்பட்ட திருகோணமலை நகர சபை தீயணைப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் கடுமையான பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைப்பதற்கு அவர்களால் முடிந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





