சிறப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கடந்த சில தினங்களாகப் பெய்த மழையினால் கொழும்பு நீரில் மூழ்கியமைக்கு நீர் வடிந்தோடுவதில் உள்ள பிரச்சினைகளே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள வடிகான் தொகுதி 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சிக்கு மட்டுமே போதுமானது என மாநகர முதல்வர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வானிலை அறிக்கைகளின்படி 1992, 2005, 2016 ஆகிய ஆண்டுகளிலும், அதேபோன்று 1993 இல் 493.7 மி.மீ மற்றும் 2010 இல் 440.2 மி.மீ எனப் பெருமளவு மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படவில்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார். வடிகான் தொகுதி மேம்படுத்தப்படாமையும் கழிவுகள் அகற்றப்படாமையுமே பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
முக்கிய விடயங்கள்
- கொழும்பு நகரின் வடிகான் தொகுதியிலுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகக் குற்றச்சாட்டு.
- 1993 இல் 493.7 மி.மீ மற்றும் 2010 இல் 440.2 மி.மீ மழை பெய்தபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.
- சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பயன்படுத்தும் நவீன வடிகாலமைப்பு முறைகளை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என முன்மொழிவு.
உலகின் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாகத் தீர்வுகள்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இருந்திருந்தால், சிங்கப்பூர் போன்ற நாடுகள் பயன்படுத்தும் Storm Water Drainage System போன்ற மேம்பட்ட புயல்நீர் வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டிகள், Pumping and Diversion System மற்றும் Green Infrastructure போன்ற நவீன எண்ணக்கருக்களை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் நெதர்லாந்து நடைமுறைப்படுத்தும் Advanced Flood Management System ஐ முன்னுதாரணமாகக் கொண்டு நீர்த் தடுப்புகள் மற்றும் நதிகளை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தத் தருணத்தில் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருக்காமல், எதிர்க்கட்சியையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம் இதற்குரிய தீர்வுகளைக் காண வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- நளின் பண்டாரவும் மனைவியும் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்த ட்ரோன்கள் மற்றும் ஒலிவாங்கிகள் கட்டுநாயக்கவில் சுங்கப் பிரிவினரால் பொறுப்பேற்பு
- மகிந்த ஜயசிங்கவுக்கு முறையான கல்வியறிவு இல்லை: ஆசிரியர் சங்கம் கடும் குற்றச்சாட்டு
- பௌத்த மதகுருமார் மற்றும் நீதிபதிகளின் இடமாற்றங்கள் தொடர்பில் சஜித்தின் தலையீட்டைக் கோரும் மொட்டுக்கட்சி






