இலங்கை சட்டமா அதிபரின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வருகை தரவுள்ள ரஷ்ய சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன், புதுக்கடையிலுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தில் சந்திப்பை நடத்துவதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2027 ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வருடாந்த செயற்பாட்டு மற்றும் கொள்முதல் திட்டங்கள் முறையாக தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விசிக கட்சித் தலைவருமான கலாநிதி தொல். திருமாவளவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முக்கியமான சுனுங் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் ஏஐ மோசடிகளைத் தடுக்க அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தென் கொரிய கல்வி அமைச்சர் சோய் க்யோ-ஜின் பதவி விலகியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களையும் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்காக, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான விசா விலக்கு உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
இலங்கை தபால் சேவை கடந்த மற்றும் நடப்பு ஆண்டுகளில் தனது வருமான இலக்குகளை விஞ்சியுள்ள போதிலும், இன்னும் இலாபமீட்டவில்லை என்று ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி வரிகளை எளிமைப்படுத்துவது மற்றும் மின்சார வாகனங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சலுகைகளை வழங்குவது குறித்து நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிவகைகள் பற்றிய குழு ஆராய்ந்துள்ளது.
2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச துறை தொழிற்சங்கங்கள் நாளை நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. தமது பிரதான கோரிக்கைகளுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட 72 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்துள்ளன.