பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 நவம்பர் 20 காலை ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டதுடன் முதியவர்களுடனும் கலந்துரையாடினார்.
தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து, அரச திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக 'பில்டர்ஸ் கேட்வே' வசதிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கட்டுமானத் துறையினர் அரச நிறுவனங்களுடன் பணிகளை முன்னெடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளையும் தாமதங்களையும் விரைவாகத் தீர்க்கும் வகையில் ‘Builders’ Gateway’ உதவி மையம் கொழும்பு 07 இல் இன்று திறந்துவைக்கப்பட்டது.
உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்திற்கு நல்லாட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழைய வீட்டுப் பகுதிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் சென்று பார்வையிட்டதை அடுத்து தமிழ்நாட்டில் பாரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
2027 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள மற்றும் கொடுப்பனவு திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.