அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைமுறையிலுள்ள பகல் சேமிப்பு நேரத்தை ஆறு மாதங்களிலிருந்து நான்கு மாதங்களாகக் குறைப்பதற்கான புதிய சட்டமூலம் மாநில நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டின் மத்திய பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதுள்ள மோதல்கள் அல்லது தடைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மாத்திரம் அமெரிக்காவுடன் எவ்வித உடன்படிக்கையையும் மேற்கொள்ள ஈரான் தயாராக இல்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய இலங்கை தொழில்முனைவோர் சங்கத்தின் முதலாவது வெளிநாட்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட சர்வஜன பலய கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜப்பானை சென்றடைந்துள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் படைகள் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கு கடற்படை முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் மீட்கப்பட்ட புதிய நிலப்பரப்பில், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்குடன் கொழும்பு துறைமுக நகரம் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுடனான மோதலில் ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா கவனித்துப் பார்க்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை ஒளிபரப்பான கருத்துகளில் தெரிவித்துள்ளார்.
மட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியின்போது இங்கிலாந்து ரசிகர்கள் கத்தோலிக்க எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால், இங்கிலாந்து உதைப்பந்தாட்ட சங்கத்திற்கு 12,572 பவுண்டுகள் அபராதம் விதிக்க ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 71.24 கிலோகிராம் எடையுடைய பாரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகுதி இந்தியாவின் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சவூதி பொது முதலீட்டு நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள ரியாத்தின் மிக உயரமான கட்டடம் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏவுகணைத் தாக்குதலில் பல மாடிகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன.