அரச, பாடசாலை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் சிறந்த அடைவுகளைப் பாராட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா, கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மணல்வாரி அம்மை நோய் பரவல் காரணமாக மூன்று பிரதான சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள் என சிறைச்சாலை அதிகாரிகள் நீதித்துறைக்கு அறிவித்துள்ளனர்.
'புத்தங்கே ரஸ்தியாதுவ' நூலாசிரியர் குறித்து வகுப்பறையில் தெரிவித்த கருத்து தவறானது எனக் கூறி, பிரபல உயிரியல் ஆசிரியர் திஸ்ஸ ஜன்னாயக்க, கே.கே. சமன் குமாரவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (09) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
எகிப்தின் கீஸா பகுதிக்கு அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 88 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 12 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழையாக காலி மாவட்டத்தின் ஹினிதும பிரதேசத்தில் 211 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை நவம்பர் 13 அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கொழும்பு முழுவதும் வடிகான்கள் அடைபட்டுள்ள 60 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க பல அரச நிறுவனங்கள் இணைந்து பாரிய துப்புரவுப் பணியை ஆரம்பித்துள்ளன.