இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து முன்செல்ல வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹொரணை, திக்ஹேன வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பலாமரத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
உலக வங்கி நிதியுதவியின் கீழ் ஆரம்ப சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற 10 புதிய டொயோட்டா டபிள் கெப் வாகனங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு - கண்டி வீதியில் வரக்காப்பொல மாஹேன பகுதியில் இன்று (07) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
வரக்காப்பொல, மஹேன பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் வானொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் ஞாயிற்றுக்கிழமை (7) பிற்பகல் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.